இணையவழி உ.வே.சா. செம்மொழித் தமிழ்த் தரவகம்

 

இணையவழி உ.வே.சா. செம்மொழித் தமிழ்த் தரவகம்
மொழித் தொழில்நுட்பத் துறை தமிழ்ச் செவ்வியல் நூல்களுக்கான தரவகத்தை (corpus) உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து இலக்கண, இலக்கியக் கல்விக்குப் பயன்படும் பல்வேறு மென்பொருள்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தரவக உருவாக்கத்தின் முதற்கட்டப் பணியாகச் செவ்வியல் நூல்கள் 41இல் இருபது நூல்கள் (தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, இறையனார் களவியல்) தரமான பதிப்புகளைக் கொண்டு கணினியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. இத்தரவகத்தைப் பயன்படுத்தி இணையவழி உ.வே.சா. செம்மொழித் தமிழ்த் தரவகம் (Online U.Ve.Sa. Classical Tamil Corpus) ஒன்றை உருவாக்கியுள்ளது.

இணைய வழித் தொடரடைவைப் பெற கீழே சொடுக்கவும்

இணையவழி உ.வே.சா. செம்மொழித் தமிழ்த் தரவகம்
சொல்லடைவி

சொல்லடைவி 1.0
சொல்லடைவி என்பது கொடுக்கப்பட்ட ஒரு நூலின் சொல்லடைவை உருவாக்கித் தரக்கூடிய கணினி நிரல். சொல்லடைவு என்பதைக் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ள ஒரு நூலிலிருந்து தரவுத் தளங்களை உருவாக்கும் முறை என்று வரையறுக்கலாம். இப்பணியைச் செய்துதரும் மென்பொருள் சொல்லடைவி எனப்படுகின்றது. மொழித் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள சொல்லடைவியில் பயனாளர் விருப்பத்திற்கேற்பக் கடவுள் வாழ்த்து, சொல் நிகழ் எண்ணிக்கை, விழுக்காடு போன்ற பிற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சொல்லடைவியைத் தரவிறக்கம் செய்யக் கீழே சொடுக்கவும்

சொல்லடைவி 1.0 பயனாளர் கையேடு

© மொழித் தொழில்நுட்பத் துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை

best view : Google Chrome or Mozilla Firefox